கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், மௌனமாய் நின்றோம் என்றால் இப்பொழுதும் என்ன எழுதுவது என்று தெரியாமல் திடீரென அனைவரும் மௌனம் காக்கின்றோம். யாரும் படிப்பதில்லையா இல்லை comment போடத் தெரியவில்லையா ஒன்றும் புரியவில்லை. நண்பர்களே மௌனம் கலையுங்கள், பதிவிடுங்கள், பதிலிடுங்கள்.
மடை திறந்த வெள்ளமென கட்டுரை படைத்த அன்வர் மகவு பிறந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அமைதி ஆனந்தத்தில் இருக்கிறார். சிறியவன் சிந்திக்க நேரமின்றி விளையாடிக் கொண்டு இருக்கிறார் போலும்.(split personality என விஜி நினைப்பது கேட்கிறது.)
விஜி மட்டுமே தமிழர் திருநாள் அன்று பதிவிட்டு 2013க்கானக் கணக்கைத் துவக்கி வைத்துள்ளார். இனி புதுப் பதிவர்களும் வரவேண்டும் என ஆவலோடு இப்பதிவை இடுகின்றேன். வருக நண்பர்களே, வருக பதிவிடுக.