Monday, 12 November 2012

LET OUR SORROWS BURST LIKE CRACKERS..
OUR HAPPINESS BE LIKE SPARKLERS..
OUR DREAMS SOAR LIKE ROCKETS..
AND LET OUR LIFE BE ENLIGHTENED BY THE LIGHTS OF DIWALI...!!!


WISHING THE ALUMNAE A VERY HAPPY & 
PROSPEROUS DIWALI!!

Tuesday, 6 November 2012

9. NCC - சைக்கிள் சவாரி


பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன். அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.

Wednesday, 31 October 2012

பேராசிரியர்களும் நானும் - 7

எல்லோருக்கும் ஒரு பதிவு என்றால் இவருக்கு மட்டும் இரண்டாவதும் பதிவிடும்  அளவிற்கு எத்தனையோ சம்பவங்கள். நாளும் ஒரு சம்பவம் நிகழும் என்றாலும் குறிப்பாய் சில சம்பவங்கள், என்னை முன்னிறுத்துவதையே  இங்கு குறிப்பிடுகின்றேன்.

Friday, 26 October 2012

பேராசிரியர்களும் நானும் - 6

  நாம் ஒருவரை சந்திக்கையில் சிலரை உடனேப் பிடித்து விடும், சிலரைக் கண்டால் வெறுப்பாய் இருக்கும். காரணம் தெரியாது.  அது முன்ஜென்மத் தொடர்பு காரணம் என்பார்கள் சிலர்.  அதுபோல், திரு சொ சொ மீ அவர்களுடனான தொடர்பு முன் ஜென்மத் தொடர்பு என்றும்  சொல்லலாம்.

Thursday, 18 October 2012

திரு சொ.சொ.மீ. உரை - “பக்தி இலக்கியம்”


திரு சொ.சொ.மீ. அவர்கள் தில்லியில் 15.09.2012 அன்று நடந்த அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் “பக்தி இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது பதிவு செய்யப்பட்டது.

பின்வரும் பாடல்களைத் தன் உரையில் குறிப்பிடுகிறார் :


பரிபாடல்

யா ஆம் இரப்பதை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்அருளும் அன்பும் அறனும் மூன்றும்

திருமந்திரம்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே


திருஞான சம்பந்தர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாம்மே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

திருவாசகம்

ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்

அடைக்கலப்பத்து
மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,
ஆ, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.

(திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)

Sunday, 7 October 2012


வார்த்தைகளே ஓவியமாய்......

        உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்ற சிக்காகோவில் 1893இல் சுவாமி விவேகானந்தர் ‘அமெரிக்க நாட்டு  சகோதரிகளே, சகோதரர்களே’ என்று துவங்கிய,  வரலாற்றுச்சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தியது எல்லோரும் அறிந்த ஒன்று. இங்குள்ள ஆர்ட் இன்ஸ்டிடியூட் இருநூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதில் பல அரிய ஓவியங்களும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படிருக்கின்றன. இந்த ஆர்ட் காலரியில் கண்காட்சி நடத்துவது பல ஓவியர்களுக்கு வண்ணக்கனவு.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3” என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன

.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.

Tuesday, 2 October 2012

8. ரத்த தானம்!!


கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.  அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக தெரியவில்லை.  காலை எழுந்தவுடன் துடிப்பு...! பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...! என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும்.  பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு கிடையாது.  மத்தியானத்திற்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது.  ஆகவே மொத்தத்தில் ‘பாக்கெட் மணி’ அப்படிங்கிற விஷயமே இல்லாத ஒன்றாக இருந்தது.

Wednesday, 19 September 2012

7. நட்பின் விதை!!


              நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம் செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம். அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!

விநாயகர் பெருமை


கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார்.  குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அவரவர்  வீட்டில் நன்றாகக்   கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி  விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு  எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை  சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார்.   

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் என பிடித்து வைத்து பூசிப்பதுண்டு. அதனில் சொருகப்படும் அருகம்புல்லினால், அச் சாணி கெடாது இருக்கும். அனைவர் வீட்டிலும் பிற தெய்வங்களுக்கு பூஜை செய்யும் சமயத்தில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அவர் அனுமதி பெற்றே முக்கிய பூஜை  துவங்கும்.  எத்தகைய எளிய ஓவியத்திலும் சிறப்பாய் விளங்கிடும் தெய்வம், கம்ப்யூட்டர் யுகத்தில் வித விதமாய் ஓவியங்கள் வருகின்றன. விநாயகர் கம்ப்யூட்டர் இயக்குவது போன்றெல்லாம், அதே போல் வித விதமாய் சிலைகளும்.


தமிழகத்தில், வாதாபி மீது படை எடுத்து வந்த பரஞ்சோதி என்பார் தமிழகத்தில் விநாயக வழிபாடு கொணர்ந்தார் எனவும்,  அதன் காரனமைத்தன் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடல் உள்ளதாக ஒரு வாதம் உண்டு. ஆனால் அதற்கும்  முன்னதாகவே தமிழகத்தில் வழிபாடு   நடந்துள்ளது என்பதற்கு பிள்ளையார்பட்டி விநாயகர் சாக்ஷி, சுமார் 2  அல்லது 3   ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிலை என்பது,  (அதன் கீழ் சிற்பியின் கையெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது  என்பதும்  அங்கே இரு கையுடன், ஜடாமுடியுடனும் சிவ லிங்கத்தை வழிபடுகிறார்  என்பதும்  சுவாரசியமான தகவல்கள்) .  ஆனால் வேத காலத்தில் விநாயக வழிபாடு இல்லை, என்பது வியக்க வைக்கும் தகவல். ஆதி சங்கரரின் பஞ்சாயதன வழிபாட்டில், இடம் பெறும் சோனபத்ரம்    அவருக்குரியது. 
                                                       
விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை  என்று சொன்னால்  பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர் வாஹனம் மூஞ்சூறு எனப்படும் எலி வகை. பாலூட்டி வகையில் நிலத்தில் வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே  விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

       பெரும்பாலான நூல்களில் அவர் வழிபாட்டு செய்யுள் இடம் பெறும். அவருக்கென விநாயகர் அகவல் ஒளவையாரால் தனியாகப் பாடப்பட்டுள்ளது. அது  முழுவதும் யோக சாஸ்திரத்தை குறிப்பதாக உள்ளது. அவருக்கு தமிழகத்தில் சிறப்பாக பிள்ளையார்பட்டி, திருச்சி, கோவை, புதுவை ஆகிய ஊர்களில் தனிக் கோயில்கள் உள்ளன. மதுரையில் இருக்கும் முக்குறுணி (1  குறுணி என்பது 6 படி) விநாயகருக்கு 18  படி அரிசி கொண்டு கொழுக்கட்டை படைப்பர், அது ஒரு வாரம் முன்னரே அடுப்பில் ஏற்றப்படும். நம்மில் நிறைந்திருக்கும் ஞானத்தை, மாயை மறைத்து இருக்கிறது என்பதன் குறியீடே கொழுக்கட்டை. (பூரணம் ஞானம், மாவு மாயை.)  18  என்ற எண்ணின் சிறப்பிற்கு கீதையின் அத்தியாயம் ஒன்றே தற்பொழுது போதுமானது.