வார்த்தைகளே ஓவியமாய்......
உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்ற சிக்காகோவில் 1893இல் சுவாமி விவேகானந்தர் ‘அமெரிக்க நாட்டு சகோதரிகளே, சகோதரர்களே’ என்று துவங்கிய, வரலாற்றுச்சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தியது எல்லோரும் அறிந்த ஒன்று. இங்குள்ள ஆர்ட் இன்ஸ்டிடியூட் இருநூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதில் பல அரிய ஓவியங்களும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படிருக்கின்றன. இந்த ஆர்ட் காலரியில் கண்காட்சி நடத்துவது பல ஓவியர்களுக்கு வண்ணக்கனவு.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3” என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன
.
.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.



No comments:
Post a Comment