Monday, 10 September 2012

அன்று அறியாதவன் - இன்று.....


எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.

தொடர்ந்து ஆதரவை விரும்பும்....

அன்வர் உசேன்.

பெயர் மாற்றம்

            "அறியாதவன்" என்ற புனைப் பெயரில் இதுவரை எழுதி வந்த அன்வர், அதிகம் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதன் பாதிப்பில் இவருக்கு பதிலாக இவர் பாணியில், "அறியாதவன்" என்ற பெயருக்கு பதிலாக சொந்தப் பெயரிலேயே இனி எழுதுவார்,  எழுதுவான்.

பெயர் மாற்றம் செய்ய 9 ஓட்டுக்கள் வந்துள்ளன. செய்ய வேண்டாம் என ஒரு ஓட்டும் விழவில்லை. இன்றுடன் வாக்குப் பதிவு முடிந்தது.  எனவே  "NOSTALGIA RECALLED" என்றப் பெயரை இந்த வலைப்பூவிற்கு சூட்டலாம் என இருக்கிறோம். அவரவர் வீட்டில் இந்நிகழ்வை சிறப்பாக கொண்டாடவும்.

6. நட்பின் அறிமுகம்!!



கல்லூரி காலங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா.......... என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின் விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ... என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்..... என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக உணர்ந்திருக்கிறேன். பிரியபூமியில் மரியாதை தோலி உரிக்கப்பட்ட நட்பின் விதைகள் தான் வேரூன்றி தோழமை விருட்சமாக வளரும்.

Wednesday, 5 September 2012

பேராசிரியர்களும் நானும் - 4

       இன்று ஆசிரியர் தினம், இந்நாளில் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.  நம் அனைவருக்கும் அன்னையே முதல் ஆசிரியர், அவருக்கும், தந்தைக்கும், கல்விச்சாலைகளில் பாடம் கற்றுத்தந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், வாழ்வில் நமக்குப் பல உண்மைகளை கற்றுக் கொடுக்கும் உடன் வாழும் மக்களும் ஆசிரிய பெருமக்களே ஒருவகையில். அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

Happy Teacher's Day!


ஆசிரியர் தின வாழ்த்து,

அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,

கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,

கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.

அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!

Remembering with respect & affection!!

HAPPY TEACHER’S DAY!!!

Monday, 3 September 2012

அறிவிப்பு - 2

              There are so many response to change the name of the blog. Smt Viji has proposed a name of  Yesteryears@BCS - Nostalgia Recalled.  If you have any new name in the mind please share.  The best name will be selected and renaming this blog will held.
                 இவ்வலைப்பூவின் பெயரை மாற்ற வேண்டும் என அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு   விஜி அவர்கள்  Yesteryears@BCS - Nostallgia Recalled என்றப்  பெயரை  முன் மொழிந்துள்ளார்.  உங்கள் மனத்திலும் ஏதேனும் புதுப் பெயர் தோன்றினால்  அவசியம் அனுப்பவும்.  நல்லப் பெயரை பரிசீலித்து, புது  பெயரை  விரைவில்  சூட்டுவோம். 



Sunday, 2 September 2012

5. முடிசூடா மன்னன் நாகு!!

எங்கள் கல்லூரிக்காலங்களில் பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில் மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.

Friday, 31 August 2012

பேராசிரியர்களும் நானும் - 3


          ஆங்கிலப் பேராசிரியர்களைத்  தொடர்ந்து வருகிறார் நமது அன்புச் சகோதரராய் நடந்து கொண்ட திரு T.S. பாலகிருஷ்ணன் அவர்கள்.  அவர் கோபப் பட்டு ஒருநாளும் கண்டதில்லை. 

Wednesday, 29 August 2012

பேராசிரியர்களும் நானும் - 2

       திரு சேதுராம் அவர்களைப் பற்றிய முந்தைய  பதிவிற்குப் பின் தற்பொழுது ஆங்கிலத்துறை சார்ந்த பேராசிரியர்கள்  குறித்து.  நமக்கு, திருவாளர்கள் பிரேம்பாபு,  மோகன்ராம், ராமானுஜம், ராஜசேகரன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.

Tuesday, 28 August 2012

பேராசிரியர்களும் நானும்


              கல்லூரிக்காலங்களில் சற்று துறவு மனப்பான்மை, தாழ்வு மனப்பாமை வாழ்வே நடத்தி வந்தேன். யாரோடும் அதிகம் பழகமாட்டேன். எதையும் serious ஆகவே பார்ப்பேன். இதில் சில விஷயங்கள் இப்பொழுதும் தொடர்ந்தாலும் என்னுள் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வை வெளியில் காட்ட ஆரம்பித்த பின்பே என் வாழ்வில் பல மாற்றங்கள் வந்தன.